Saturday, 21 November 2015

பறையன் குளம் எல்லைக்காளியம்மன் கோவில்

பறையன் குளம் 
எல்லைக்காளியம்மன் கோவில்

திருகோணமலையிலிருந்து அனுராதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் இருபத்தைந்து கிலோமீற்றர் தூரத்தில் முதலிக்குளச் சந்தியிலிருந்து வடக்கே ஒரு சிறு சாலை பிரிந்து செல்கிறது. அந்தச் சாலையில் பத்து கிலோமீற்றர் தூரத்தில் நல்லபிட்டியா என்ற கிராமம் இருக்கின்றது. அங்கிருந்து காட்டுப் பாதையூடாக ஐந்து கிலோமீற்றர் தூரம் சென்றால் பறையன் குளம் எல்லைக்காளியம்மன் கோவிலையடையலாம். இக்கோவிலின் அருகே நல்லபிட்டி ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. இங்கு கோவிலை பார்க்கும் நினைப்போடு அங்கு சென்றால் ஏமாற்றமாகவே இருக்கும். சாஸ்திர ரீதியாக சீரமைக்கப்பட்ட கோவில் அங்கு இல்லை.

பதவியாவில் தழிழர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த இடம் சைவப்பெருங்குடி மக்கள் வாழ்ந்து மிகவும் பிரசித்திபெற்றிருந்ததை ஊகித்தறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாலயத்தில் அழகிய பத்திரகாளி அம்பாள் சிலாவிக்கிரகம் ஒன்று இருக்கின்றது. இந்த விக்கிரகமே கடந்தகால வரலாற்றைப் பற்றி ஆராய்வதற்கு காரணியாக இருந்து வருகின்றது. இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டபடி சதுர்புஜங்களை கொண்டவராக பீடத்தில் அம்பாள் அமர்ந்திருக்கின்றார். இயற்கையின் தாக்கங்களால் சிலையின் அழுத்தம் சிறிது குறைந்திருந்தாலும் திருவுருவத்தில் பின்னமேற்படவில்லை. 

இந்த இடத்திற்கு “புலிகண்டி” என்று ஒரு பெயரும் வழங்கிவந்திருக்கின்றது. காட்டிற்கு வேட்டையாடச் சென்ற வேடர்கள் புலியில் ஒரு பெண் போவதைக் கண்டு தொடர்ந்து சென்ற போது அது ஒரு குறித்த இடத்திற்கு அப்பால் மறைந்து விட்டதாம். அதனால் அந்த இடத்திற்கு “புலிகண்டி” என பெயரிட்டார்களாம். புலிகண்டகுளம் என ஒரு குளமும் அங்கிருக்கின்றது. பிடாரிஅம்மன் சோலை என்றும் இந்தக் காட்டுப் பிரதேசத்தைக் கூறுவார்கள். இங்கிருக்கின்ற எல்லைக்காளி அம்மனைக் கருத்தில் கொண்டே இந்தப் பெயர்களை இட்டார்களாம். இந்தப் பிரதேசத்தில் பறையன்குளம்ää புலிகண்டகுளம்ää கொக்குவிழுந்தான்ää கற்றுக்கட்டுக்குளம்ää இரணைமடுக்குளம்ää விளாங்குளம்ää குறிஞ்சாக்குளம்ää முதலிய குளங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஆதலால் இப்பகுதியில் மக்கள் நீண்ட காலத்திற்கு முன்பே விவசாயம் செய்து வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதை ஊகித்தறியக்கூடியதாக இருக்கின்றது.

சுமார் அறுபது வருடங்களுக்கு முன் திரு முத்தையாசாமியார் என்பவருடைய தலைமையில் கோமரங்கடவையில் வாழ்ந்த அப்புக்காமியும்ää தட்டையா என்பவரும் இந்தக் கோவில் இருந்த இடத்தைத் தேடி பல நாட்கள் அலைந்து திரிந்திருக்கின்றார்கள். சிரமங்களையும்ää கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் விடாமுயற்சியோடு இந்த பயங்கர வனத்தில் தேடியலைந்த போது இந்தக் காளியம்மன் சிலை கழுத்து மட்டம் வரை மண்ணில் புதைந்திருப்பதைக் கண்டார்கள். இந்த இடத்தையடைவதற்குரிய வழியடையாளங்களை வைத்துக் கொண்டு வந்துää வேண்டிய உபகரணங்களோடு மீண்டும் சென்று நிலத்தை அகழ்ந்த போது காளியம்பாளின் திருவுருவம் நிமிர்ந்தபடியே ஒரு கற்பாறையின் மேல் இருந்ததாம். அகழ்ந்த இடத்தில் சிதைந்த செங்கற்களும் காணப்பட்டன. எனவே இங்கு ஆலயமொன்றிருந்தது பன்னெடுங்காலத்திற்கு முன்னரே இயற்கை ஏதுக்களினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அழிந்திருக்கலாம். சற்றுத்துரத்தில்எட்டடி உயரமான கருங்கற் தூண்களும் காணப்படுகின்றன. சிதைந்த தூண்களும் சிலவுண்டு.

இந்தக் காளியம்மன் திருவுருவத்தை கண்டு பிடித்தவர்கள் அது இருந்த இடத்திலே வைத்து கொத்துப் பந்தல் அமைத்தார்கள். பின்னர் திரு முத்தையாச்சாமியார் களிமண்ணினாலும்ää கல்லினாலும் சிறு கோவில் கட்டி வழிபட்டு வந்தார். அவருடைய விடா முயற்சியால் மக்களுக்கும் காளியம்பாளில் ஈடுபாடும் பயபக்தியும் ஏற்பட்டது. இந்த ஆலயத்தை சுற்றி இடும்பன்மலைää வெள்ளாட்டிமலைää நாச்சியார்மலைää மச்சமலைää அசுவத்மலைää பிள்ளையார்மலை என பல மலைகளுண்டு. இடும்பன்மலை மிக விசேடமானது. யோகிகள் தவம் செய்த இடம் போல குகைகளையுடையதாய் காணப்படுகின்றது. 

பல ஆண்டுகாலமாக பரிபாலித்து வந்த முத்துச்சாமியார் இந்து இளைஞர் மன்றத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். இலங்கையை சோழ மன்னர்கள்அ ஆண்ட காலத்தில் திருக்கோணேஸ்வரத்திற்கு இது எல்லைக்காணியாக இருந்ததாம். அதே போல் கந்தளாயிலும்ää சம்பூரிலும் எல்லைக்காணிகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாக கர்ண பரம்பரைக்கதைகள் இருந்து வருகின்றன.

No comments:

Post a Comment