Sunday, 31 January 2016

மூதூர் பிரதேச செயலகத்தினால் மூதூர் வரலாறு பற்றிய பதிவு கீழ்கண்டவாறு பதிவாக்கப்பட்டுள்ளது

மூதூர் பிரதேச செயலகத்தினால் மூதூர் வரலாறு பற்றிய பதிவு கீழ்கண்டவாறு பதிவாக்கப்பட்டுள்ளது
-----------------------------------------------
மூதூர் வரலாற்றில் மூதூரை “கொட்டியாபுரப்பற்று/கொட்டியாரம்” என்று அழைக்கப்பட்டு வந்தது. மூதூரில் முஸ்லீம், தமிழ், சிங்களவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
வரலாற்றுத் தகவலின் அடிப்டையில் முஸ்லீம்கள் மேற்குக் கரையோரப் பகுதியிலிருந்து கண்டி இரண்டாம் இராஜசிங்க மன்னனால் கொண்டுவரப்பட்டார்கள்.
அதே காலப்பகுதியில் கொட்டியாபுரப்பற்று, “வன்னியன் சகோதரர்கள்” கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுக்கிடையில் ஏற்பட்ட அரசுரிமை போராட்டத்தின் பின்னர் தூத்துக்குடியிலிருந்து கத்தோலிக்க வீரர்ளை படை திரட்டி கொட்டியாபுரப் பற்றுக்கு கொண்டு வந்தான்.
1638 இல் கரையோரப் பிரதேசங்கள் போர்த்துக்கீசரிடமிருந்து டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அந்தக் காலப்பகுதியில் கொட்டியாபுரப்பற்று கண்டி இரண்டாம் இராஜசிங்க மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது.
இம்மன்னனின் கோட்டை மூதூர் மத்திய கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் இருந்ததற்கான சான்றுகள் காணப்பட்டன.
1669 இல் கோடையானது கரையோரத்தில் (புளியடியில்) “ரொபட்நொக்ஸ்” இரண்டாம் இராஜசிங்கனால் கைது செய்யப்பட்டார். 1947 இல் கொட்டியாபுரப்பற்று இறைவரி உத்தியோகத்தரினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
1952 இற்குப் பிறகு கொட்டியாபுரப்பற்று மூதூர், சேருவில என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
1972 இற்குப் பின்னர் மூதூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.1993 இல் இருந்து இது பிரதேச செயலகமாக செயல்பட்டு வருகின்றது.
குறிப்பு பிரதேச செயலகத்தின் 2012 இன் செயலாளர் பெயர் மட்டுமே
Skn Pillai and 22 others like this.
Comments
Farhan Musthafa * ரொபட் நொக்ஸ் என்பவன் கப்பலில் ஏற்பட்ட கோலாறினால் மூதூரில் கரை ஒதுங்கி சில நாற்களின் பின்னர் மன்னனின் கட்டளையின் பின்னரே கைது செய்யப்பட்டு கண்டிக்கு கொண்டு செல்லப்படுகிறான்.

*அநுராதபுர ஜெயிலில் இருந்து பெருங் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஒருவன். அங்கிருந்து தப்பிச் சென்று சேருவில என்ற காட்டில் கஞ்சா செடி பயிர் செய்கிறான். இக் காடு இதற்கு முன்னர் வடக்கு வாழ் தமிழ் பேசும் மக்களால் காலநிலை பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தி வந்தது.
பின்னர் அவன் நண்பர்கள் உறவினர்களுடன் இப்பகுதியில் குடியேறி அங்கு சிறு பௌத்த வணக்கஸ்தலத்தை அமைக்கிறான். இதுவே இன்றைய மிகப் பெரிய பௌத்தர்களின் புனித ஸ்தலமான சேருவில விகாரையாகும்.

*இலங்கையை நோக்கிய எல்லாவிதமான படையெடுப்பு முதலில் மூதூர் வந்து பின்னர் திருகோணமலையை கைப்பற்றி அங்கேயே கோட்டையை அமைத்துக் கொண்டனர்.

* கவலைக்குரிய இன்னும் ஒரு விடயம் நமது பெரிய பள்ளிவாயல் புணர் நிர்மாணம் செய்ததே. நீங்கள் கூறும் புராதனங்கள் சில இப்புனர் நிர்மானத்தால் அழிந்து விட்டன. ( அவர்கள் பள்ளியை அதை அண்டிய பகுதியில் அமைத்து பழமையை பாதுகாத்திருக்கலாம்

Friday, 29 January 2016

பாண்டிய மன்னன் எழுதிச் சென்ற இரு கயல் இலச்சினை. இங்கே இவ்வாறு இருகயல் எழுதிச்சென்றான் பாண்டியன் என்ற செய்தியை தமிழகத்தின் குடுமியான் மலைச் சாசனம் உறுதி செய்கின்றது.
பிற்காலப் பாண்டிய பேரரசின் பேரரசன் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிகாலத்தில் (கி.பி 1251 - 1269/70) அவனோடு துணை ஆட்சி செய்த முதலாம் ஜடாவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1253 - 1281) இலங்கை மீது படையெடுத்து வந்து இலங்கை மன்னரை தோற்கடித்து தான் அடைந்த வெற்றியை கொண்டாடு மகமாக திரிகூடமலையிலும் கோணமாமலையிலும் தன் வம்சத்து இலச்சியையான மீனைப் பொறித்துச் சென்றான். இதனை அவனது குடுமியாமலை சாசனம் இவ்வாறு குறிப்பிடுகின்றது
"அரைசு கெழுதாயம் அடையவாரி
கானா மன்னவர் கண்டு கண்டேங்க
கோணமாமலையிலும் திரிகூடக்கிரியிலும்
உருகெழு கொடிமிசை இருகயலெழுதி
எனை வெந்தனை ஆணை கொண்டு " - (குணசிங்கம்.செ,கோணேஸ்வரம்,பேராதனைப் பல்கலைக்கழகம், 1973, பக்.113- 114 , <<சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.180-1181)
Comments
Gajen Skandarajah காலப்பகுதி எது?
Sathiyathevan Sargunam பிற்காலப் பாண்டிய பேரரசின் பேரரசன் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்